“வட இந்தியாவில் பாஜக-விற்கு ஆதரவு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது” – காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்

வட இந்தியாவில் பாஜக-விற்கு ஆதரவு இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  சிவகங்கையில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது: “திமுக தனது…

வட இந்தியாவில் பாஜக-விற்கு ஆதரவு இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

சிவகங்கையில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

“திமுக தனது இளைஞரணி மாநாட்டின் மூலம் தன்னுடைய பலத்தை காட்டியுள்ளது. அவர்கள் இந்த மாநாட்டை நடத்தியுள்ளது பாராட்டுக்குரியது. அதேபோல் மாநாடு காங்கிரஸ் கட்சியிலும் நடத்த வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்திய மீனவர் 6 பேர் கைது குறித்த கேள்விக்கு இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பதை வைத்தே இந்த அரசின்
செயல்பாடு குறித்து தெரிந்துகொள்ளலாம்.

அண்டை நாடுகளுடன் இருக்கும் நட்பை இந்த அரசு எப்படி கையாள்கிறது என தெரிந்துகொள்ளலாம்.  மீனவர் பிரச்சனை மீது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க இந்த அரசு முன்வரவேண்டும். இந்த அரசு பொது துறை நிறுவனங்களை எல்லாம் தனியார்
நிறுவனமாக மாற்றிவருகிறது.

இதையும் படியுங்கள்:  மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு: 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

பா.ஜ.க வதந்தி பரப்பி வடநாடு போல செய்துவிடலாம் என நினைக்கிறார்கள் அது நடைபெறாது. பாஜக-வின் வதந்தி தமிழ்நாட்டில் எடுபடாது. வட இந்தியாவின் இந்துத்துவா வேறு, தென்னிந்தியாவின் இந்துத்துவா வேறு. அவர்கள் இங்குள்ள சுடலைமாடன் சாமியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். காங்கிரஸ் கட்சியை பொருத்தமட்டில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம்.

பூத் கமிட்டி என அனைத்தும் அமைக்கப்பட்டது.  வருகிற நாடாளுமன்ற தேர்தலில்
தமிழ்நாட்டில் திமுக தலைமையில் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். வட இந்திய அரசியல் வேறு, நம்முடைய அரசியல் வேறு. வட இந்தியர்களுக்கு தேவையானதை பாஜகவினர் செய்துவருகின்றனர்.  அதலால் பாஜகவிற்கு வட இந்தியாவில் ஆதரவு இருக்கிறது என்பதை நான் மறுக்க மாட்டேன்.

ஆனால் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெறும்.  தமிழக காவல்துறையில் காவல் நிலையத்தில் சித்திரவதை என்பது அதிகமாகவே உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அது முற்றிலும் தவறு அதுபோல் செயல்படும் அதிகாரிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.