2023-ஆம் ஆண்டின் சிறந்த வீரர்கள் அடங்கிய சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு! கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு..!

2023-ஆம் ஆண்டின் சிறந்த வீரர்கள் அடங்கிய சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது ஐசிசி. கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்கள்…

2023-ஆம் ஆண்டின் சிறந்த வீரர்கள் அடங்கிய சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது ஐசிசி. கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்கள் அடங்கிய ஆடவர்  ஒருநாள்  அணியை அறிவித்துள்ளது. இதில்,கடந்த ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் 11 பேர் கொண்ட ஒருநாள் அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டு ஆஸ்திரேலியர்கள், இரண்டு தென்னாப்பிரிக்கர்கள், ஒரு நியூசிலாந்து வீரர் மற்றும் ஆறு இந்திய வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படியுங்கள் ; இணையத்தில் வைரலாகும் கல்வி குறித்த சிறுவனின் பேச்சு!

இதன்படி, ரோஹித் சர்மா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஷுப்மன் கில், விராட் கோலி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

11 பேர் அடங்கிய அணியில், ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், டிராவிஸ் ஹெட், விராட் கோலி, டேரில் மிட்செல், ஹென்ரிச் க்ளாசன், மார்கோ ஜேன்சன், ஆடம் ஸாம்பா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 

https://twitter.com/ICC/status/1749690001627988475?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1749690001627988475%7Ctwgr%5E9ded9ecb537c87e84ebfe57513a6fa85bdc5915c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fsports%2Fsports-news%2F2024%2Fjan%2F23%2Frohit-sharma-leads-icc-odi-team-of-the-year-dominated-by-indians-4143734.html

 

 

 

 

 

 

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.