‘டெல்லியின் ஓக்லா தொகுதியில் AIMIM வேட்பாளர் வெற்றி’ என வைரலாகும் டில்லி தக்-கின் பதிவு உண்மையா?

டெல்லியின் ஓக்லா தொகுதியில் AIMIM வேட்பாளர் வெற்றி பெறுவார் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை கூறும் வகையில் டில்லி தக் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

Is the viral Delhi Tak-Kin post saying 'AIMIM candidate wins in Delhi's Okhla constituency' true?

This News Fact Checked by ‘The Quint

டெல்லி சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, செய்தி நிறுவனமான டில்லி தக்கின் (ஆஜ் தக்கின் செய்திகளின் கிளை நிறுவனம்) லோகோவுடன் ஒரு கருத்துக் கணிப்பு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த கிராஃபிக் டெல்லியில் உள்ள ஓக்லா தொகுதியைப் பற்றியது.

வைரலாகிவரும், கிராஃபிக் கார்டில், “அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) வேட்பாளர் ஷிஃபா உர் ரெஹ்மான் 50.15% வாக்குகளுடன் முன்னிலை, பாஜக வேட்பாளர் மணீஷ் சவுத்ரி 30.76%, ஆம் ஆத்மி உறுப்பினரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அமனத்துல்லா கான் 12.65% மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் அரிபா கான் 4.33% வாக்குகளுடன் கடைசி இடத்தில் உள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கிராஃபிக் கார்டு வாட்ஸ்அப்பிலும் பரவி வருகிறது. (இதே போன்ற கூற்றுகளின் காப்பகங்களை இங்கே மற்றும் இங்கே காணலாம்)

இந்தக் கூற்று உண்மையா?: இல்லை, இந்தக் கூற்று பொய். டில்லி தக்கின் ஆசிரியர், அந்தக் கிராஃபிக் போலியானது என்பதை தி குயின்ட்டிடம் உறுதிப்படுத்தினார்.

உண்மை சரிபார்ப்பு:

முதலில், அத்தகைய கிராஃபிக் வெளியிடப்பட்டதா என்று சரிபார்க்க டில்லி தக்கின் சமூக ஊடக பக்கங்கள் சரிபார்க்கப்பட்டன. ஆனால் அப்படி எதுவும் கிடைக்கவில்லை.

  • தொடர்ந்து இதே போன்ற ஏதாவது பதிவை ஆஜ் தக் வெளியிட்டுள்ளதா என சரிபார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் கிடைக்கவில்லை.

தொடர்ந்து, டில்லி தக் பத்திரிகையின் ஆசிரியர் அனுராதா தன்வாரை தொடர்பு கொண்டபோது, அவர் அந்த கிராஃபிக் போலியானது என்பதை உறுதிப்படுத்தினார்.

  • அந்தச் செய்தி நிறுவனம் தங்கள் ட்விட்டர் (எக்ஸ்) கணக்கில் டில்லி தக் அத்தகைய கணக்கெடுப்பை நடத்தவில்லை என்று பதிவிட்டிருந்தது. மேலும் வைரலாகும் பதிவு “போலி” எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:

AIMIM வேட்பாளர் முன்னிலை வகிப்பதாக பொய்யா, டில்லி தக்கின் லோகோவுடன் ஓக்லா தொகுதியின் போலி கருத்துக் கணிப்பு கிராஃபிக் வைரலானது கண்டறியப்பட்டது.

Note : This story was originally published by ‘The Quint and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.