‘தல சொல்றத கேளுங்க.. தலைக்கு ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டுங்க..’ – நியூஸ்7 தமிழ் அன்புபாலம் மற்றும் ஜோதி அறக்கட்டளை சார்பில் நூதன சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!

தஞ்சாவூரில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்த வந்த பெண்களுக்கு விடாமுயற்சி படத்தை திரையரங்கில் காண விலையில்லாமல் டிக்கெட் மற்றும் பெட்ரோல் வழங்கிய நியூஸ்7தமிழ் அன்புபாலம் மற்றும் ஜோதி அறக்கட்டளை சார்பில் நூதன சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பெற்றது.

நியூஸ்7 தமிழ் அன்புபாலம் சார்பில் சமூக பொறுப்புடன் கூட விழிப்புணர்வு
பிரசாரங்கள் பல்வேறு தனியார் அமைப்புகளுடன் இணைந்து தொடர்ந்து
முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சையில் ஜோதி அறக்கட்டளை மற்றும் நியூஸ்7 தமிழ் அன்புப்பாலம் சார்பில் நூதன சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை ஆத்துப்பாலம் பகுதியில் நடைபெற்றது.

இதில் அந்த வழியாக தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 50 பெண்களுக்கு நடிகர் அஜித் நடித்து தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை குடும்பத்துடன் கண்டுகளிக்க ஒவ்வொருவருக்கும் தலா 3 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. மேலும் அனைவருக்கும் விலையில்லா 1 லிட்டர் பெட்ரோலும் வழங்கப்பட்டது.

நடிகர் அஜித் தனது திரைப்படங்களில் வாயிலாகவும் ஹெல்மெட் அணிவது மற்றும் சீட்பெல்ட் அணிந்து குறித்த சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் அதை குறிக்கும் வகையில் இந்த நூதன் விழிப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்ததாக ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தெரிவித்தார்.

இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி நிர்வாக உதவியாளர் குகனேஸ்வரி தன்னார்வலர் கல்யாணசுந்தரம் ஆர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.