2026 ஐபிஎல் தொடரின் முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி சென்ற ஆண்டு கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ம் தேதி நடைபெறவுள்ளள்ளது. இப்போட்டியில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இதில் தமிழ் நாட்டின் தலைநகரை ஹோம் கிரண்டாக கொண்ட சென்னை அணியின் போட்டிகள் குறித்து பார்ப்போம்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின் படி சென்னை அணி மார்ச் 30 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. அடுத்து ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியையும் ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பெங்களூரு அணியையும் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் டெல்லி அணியையும் எதிர்கொள்கிறது.








