தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது ‘வேட்டுவம்’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும்க், ஆர்யா வில்லனாக நடித்து வருகின்றனர்.
இப்படத்துல், அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ் மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘வேர்ல்ட் ஆப் வேட்டுவம்’ என்ற அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வேட்டுவம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி வேட்டுவம் திரைப்படம் வரும் 2027 -ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வேட்டுவம்படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் இசை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




