இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. உலகிலேயே அதிக பார்வையாளர்கள் பங்கேற்ற ஐபிஎல் தொடர் விளங்குகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 18 ஆவது ஐபில் தொடரில் பெங்களூரு அணி கோப்பையை வென்றது.
தொடர்ந்ந்த் 19 ஆவது ஐபிஎல் தொடரின் அட்டவணை எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது.
ஐபிஎல்-லின் முக்கிய அணிகளின் மாநிலங்களான மேற்கு வங்கம் (கொல்கத்தா அணி) மற்றும் தமிழ்நாடு (சென்னை அணி) பகுதிகளில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படாததால், 2026 சீசனுக்கான அட்டவணை அறிவிப்பு தாமதமாகியுள்ளது
இந்த நிலையில் 2026 ஐபிஎல் தொடரின் முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன் படி சென்ற ஆண்டு கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ம் தேதி நடைபெறவுள்ளள்ளது. இப்போட்டியில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.








