முதலீட்டு வாரம் – அள்ளி குவித்த தமிழ்நாடு

இந்த வாரம் முழுவதும் தமிழ்நாடு அரசின் சார்பாக பல்வேறு துறைகளில் முதலீடுகள் பெறும் விதமாக பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறைக்கு உற்சாகமான வாரமாக அமைந்துள்ளது இந்த…

இந்த வாரம் முழுவதும் தமிழ்நாடு அரசின் சார்பாக பல்வேறு துறைகளில் முதலீடுகள் பெறும் விதமாக பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறைக்கு உற்சாகமான வாரமாக அமைந்துள்ளது இந்த வாரம் அமைந்துள்ளது. ஹூண்டாய், மிஸ்துபிஸி எலெக்ட்ரிக், ராயல் என்ஃபீல்டு போன்ற முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பெரிய முதலீடுகளை அறிவித்துள்ளன

கண்டுபிடிப்பு, தொலைத்தொடர்பு கருவிகள், மின்னணு சாதனங்கள் உற்பத்தி, இருசக்கர வாகனங்களுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த முதலீடுகள் அமைந்துள்ளன.

புதிதாக செய்யப்பட உள்ள இந்த முதலீடுகள் மூலம் மாநிலத்தில்  வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் மட்டும் தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் – ரூ 20,000 கோடி, மிட்சுபிசி எலக்ட்ரிக் நிறுவனம் – ரூ 1,891 கோடி,  ராயல் என்ஃபீல்டு நிறுவனம் – சுமார் ரூ 1,500 கோடி  என முதலீடு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.