”அனைவராலும் விரும்பப்படும் படமாக ஃபர்ஹானா மாறட்டும்” – நடிகர் சூர்யா வாழ்த்து

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ஃபர்ஹானா திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் , ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், ஐஷ்வர்யா தத்தா, அனு மோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஃபர்ஹானா.…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ஃபர்ஹானா திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் , ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், ஐஷ்வர்யா தத்தா, அனு மோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஃபர்ஹானா. ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களின் வரிசையில் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வெளிவரும் எத்தனையோ திரைப்படங்களுக்கு மத்தியில் இஸ்லாமிய குடும்பப் பின்னணியைக் கொண்ட நாயகியை மையப்படுத்தி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள இப்படத்திற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் படத்துக்கு தடை கோரி குரல்கள் எழுப்பியுள்ளன.

https://twitter.com/Suriya_offl/status/1657031435130138624?t=W0ERJgCewC6KZVAY7xbEcQ&s=08

இதனிடையே ஃபர்ஹானா திரைப்படம் மத உணர்வுகளுக்கு எதிரானது இல்லை என படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. படம் குறித்து ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சைகள் வேதனையைத் தருவதாகவும், நோக்கத்தில் பழுதில்லா ஒரு திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஃபர்ஹானா படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”படத்தை பற்றி நல்ல விஷயங்களை கேள்விப்படுகிறேன். அனைவராலும் விரும்பப்படும் படமாக ஃபர்ஹானா மாறட்டும்” என்று சூர்யா பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.