கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.பி முனுசாமியை ஆதரித்து கர்நாடக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பைரத்தி பசவராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கர்நாடக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பைரத்தி பசவராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் வாக்காளர்களிடையே பேசும்போது, கே.பி. முனுசாமியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பாஜக – அதிமுக கூட்டணியில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் செய்யப்பட்டு உள்ளது எனத் தெரிவித்த பைரத்தி பசவராஜ், இந்த தொகுதியில் கே.பி.முனுசாமி பல வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளார் எனக் கூறினார். இப்படிப்பட்ட வேட்பாளரை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். மேலும் கே.பி.முனுசாமி வெற்றிபெற்றால், நிச்சயம் அமைச்சராவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.







