என்னதான் பொய் பிரசாரம் செய்தாலும், அதிமுக, பாஜக கூட்டணியால் தமிழகத்தில் வெற்றியடைய முடியாது என தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார் உள்ளிட்ட திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அவர், மறைந்த முதல்வர்கள் காமராஜருக்கும், கருணாநிதிக்கும் இடையே இருந்த நட்பை குறிப்பிட்டு உருக்கமாக பேசினார். உடல் நலிவுற்ற நிலையிலும் காமராஜர் தனது திருமணத்திற்கு வந்து வாழ்த்தியதையும் அப்போது அவர் நினைவுகூர்ந்தார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அதிமுக, பாஜக கூட்டணி என்னதான் பொய் பிரசாரம் செய்து வந்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது என தெரிவித்தார்.