அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்தார். இன்று காலையில் ஆயிரம் விளக்கு பகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் வருகின்ற 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு ஆதராவக பரப்புரையில் ஈடுபட மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். நேற்று துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்துக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். சென்னையில் தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு தூத்துக்குடி செல்லும் அமித்ஷா, ராமநாதபுரம், நெல்லையில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார்.







