ஆ.ராசா மீது திமுக தலைமை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்: கேபி.முனுசாமி!

வரைமுறையின்றி பேசிய ஆ.ராசா மீது திமுக தலைமை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என கேபி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கேபி முனுசாமி, ஒரு தாயை சங்கடப்படுத்தும் வகையில்…

வரைமுறையின்றி பேசிய ஆ.ராசா மீது திமுக தலைமை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என கேபி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கேபி முனுசாமி, ஒரு தாயை சங்கடப்படுத்தும் வகையில் கருத்துகளை தெரிவிப்பது மிகவும் வேதனையளிப்பதாக கூறினார். வரைமுறையின்றி பேசிய ஆ.ராசா மீது திமுக தலைமை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என குறிப்பிட்ட கே.பி.முனுசாமி, ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காததால், இது போன்ற கருத்துகளை தெரிவிப்பவர்களுக்கு, கட்சி தலைமையும் ஆதரவாக இருப்பதாகவே நினைக்க தோன்றும் எனவும் கூறினார்.

திமுகவில் உள்ள பல தலைவர்கள் பெண்கள் மீது மரியாதை இல்லாதவர்களாகவே இருப்பதாக சாடிய அவர், இது போன்ற தரக்குறைவான விமர்சனங்களை ஏற்க முடியாது என்றும், இது கண்டனத்துக்குரிய செயல் என்றும் தெரிவித்தார். இது போல, தரக்குறைவாக பேசுபவர்களுக்கு தர்மம் நிச்சயமாக தக்க தண்டனையை அளிக்கும் எனவும் கே.பி.முனுசாமி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.