மாநில உரிமைகளை திராவிட கட்சிகள் பறிகொடுத்துவிட்டன – சீமான் விமர்சனம்

பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய மாநிலத்தின் உரிமைகள் அனைத்தையும் திராவிட கட்சிகள் பறிகொடுத்துவிட்டன என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்தார். காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில்…

பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய மாநிலத்தின் உரிமைகள் அனைத்தையும் திராவிட கட்சிகள் பறிகொடுத்துவிட்டன என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்தார்.

காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சால்டினுக்கு வாக்கு கேட்டு அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், மொழிப்பற்று, இனப்பற்று இல்லாமல் சாதி பற்று காரணமாக தமிழர்கள் சிதைந்து அழிந்து கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்தார்.

அண்ணா வலியுறுத்திய தன்னாட்சி அதிகாரத்தை திராவிட கட்சிகள் முற்றிலும் இழந்து விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மாநில உரிமையாக இருந்த கல்வியை மத்திய அரசின் பொதுப் பட்டியலுக்கு மாற்றிவிட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழகத்தின் ஆறு லட்சம் கோடி ரூபாய் மொத்தக்கடனில் மின்துறையில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் சீமான் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.