முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகிறது – எச்.ராஜா

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான தேர்தல் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று காமாட்சி அம்மனிடம் வழிபட்டதாக கூறினார்.

மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றால், திமுக கூட்டணி வெற்றி பெறக் கூடாது எனத் தெரிவித்தார். கடந்த 2006-2011இல் ஆட்சி செய்த திமுக, வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் எச்.ராஜா குற்றஞ்சாட்டினார்.

Advertisement:
SHARE

Related posts

நாடு முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 447 பேர் உயிரிழப்பு

Halley karthi

முதல் பெண் ராணுவ காவலர்களின் தரவரிசைப் பட்டியலை விரைவில் வெளியிடும் இந்திய ராணுவம்!

Halley karthi

சொந்த ஊர் திரும்பும் மீனவர்கள்!

Ezhilarasan