முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

2020-ம் ஆண்டு 9,849 இணையதள கணக்குள் முடக்கம்!

நாட்டின் இறையாண்மை மற்றும் பொது ஒழுங்கிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் 9,849 சட்டவிரோத இணையதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.


மக்களவையில் எழுத்துப்பூர்வமாக நேற்று அவர் அளித்துள்ள பதில் கடிதத்தில், “இந்தியாவின் இறையாண்மை, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளிநாட்டு நட்பு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கடந்த 2020-ம் ஆண்டு செயல்பட்ட 9,849 இணையதளங்களின் கணக்குள் முடக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தகவல் தொழில்நுட்பவியல் 69A சட்டத்தின்படி எடுக்கப்பட்டுள்ளது.
இணையதள கணக்குள் குறித்த புகார் பெரும்பாலும் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021 சட்டத்தின்படி தீர்க்கப்பட்டுள்ளதாக” அவர் தெரிவித்தார்.


இந்த சட்டத்தின் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டு 1,385, 2018-ம் ஆண்டு 2,799, 2019-ம் ஆண்டு 3,603 இணையதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மூடக்கப்பட்ட இணையதள கணக்குகளின் எண்ணிக்கை கடந்த 2019-ம் ஆண்டைவிட 170 சதவீதம் அதிகமாகும்.

Advertisement:

Related posts

கடன் தொல்லை: நகைக்கடை வியாபாரி, குடும்பத்தினருடன் தற்கொலை முயற்சி!

Saravana

தமிழகம் ரூ.5 லட்சம் கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Nandhakumar

பெருமாள் முருகனின் வரிகளில் அம்பேத்கருக்கு கர்நாடக இசையில் T.M. கிருஷ்ணாவின் பாடல்!

எல்.ரேணுகாதேவி