சென்னையில் தேங்கியிருக்கும் மழைநீர் குறித்து தமிழக அரசைச் சாடி தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேதனையுடன் கவிதை எழுதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை கன மழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் மழை நீரால் மூழ்கின. மாநில அரசின் விரைவான நடவடிக்கைகளால் பல பகுதிகளிலும் தண்ணீர் வடிந்து விட்டது என்றாலும் சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.
இதனை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், 2015-ம் ஆண்டு வெள்ளத்தின் போது சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பின்போது தான் பணியாற்றியது குறித்த புகைப்படங்களை பகிர்ந்து தற்போதைய நிலை குறித்து கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.







