ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முடிவு பாராட்டுக்குரியது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய – அமெரிக்க தொழில் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ரஷ்யா- உக்ரைன் போர் மற்றும் அதன் பின்விளைவுகள் அதனால் உலக அளவில் எற்பட்ட எரிபொருள் பற்றாக்குறை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போரால், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது பற்றி குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த நெருக்கடியான நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மிகவும் வலிமையான அரசியல் முடிவை மேற்கொண்டதாகவும், அது தான் ரஷ்யாவில் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் முடிவு என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். அந்த முடிவுக்காக பிரதமர் மோடியைப் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உக்ரைனுடான யுத்தத்தை ரஷ்யா தொடங்கியதும, அமெரிக்கா மற்றும் இதர நாடுகள் மாஸ்கோ மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தன. ஆனால் இந்தியாவோ எதற்கும் அஞ்சாமல், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து குறைந்த விலையில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.