உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரால் நமது விவசாயத்துறையில் ஏற்றுமதி, இறக்குமதியில் ஏற்படுத்தவுள்ள பாதிப்பை எண்ணி மிகவும் கவலையடைவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் மத்திய பட்ஜெட் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள், பட்டயக் கணக்காளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அவர், உக்ரைனுடனான நமது ஏற்றுமதி, இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை மத்திய அரசு உன்னிப்புடன் கவனித்து வருகிறது.
குறிப்பாக, நமது விவசாயத்துறையில் ஏற்றுமதி, இறக்குமதியில் ஏற்படுத்தவுள்ள பாதிப்பை எண்ணி தாம் மிகவும் கவலையடைவதாக கூறிய அவர், இந்த 2 பிரச்னைகளிலும் உள்ள விரிவான தகவலை பெற்ற பின்புதான் கருத்து தெரிவிக்க முடியும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.








