தமிழக அரசியல் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசினேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த பாஜக
மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் டிஃபர்மேஷன் வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைத்தால் அவரது பதவி காலம் சஸ்பெண்ட் ஆகிறது. ஏற்கனவே ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இதையும் படிக்கவும்: நடிகர் அஜித்குமாரின் தந்தை உடல் தகனம்; திரையுலகினர் இரங்கல்
நேற்று மத்தியஅமைச்சர் அமித்ஷாவை சந்தித்தேன். தமிழகத்தின் அரசியல் நிலை குறித்து பேசினேன். கூட்டணியை பொறுத்தவரை பாராளுமன்ற குழு தான் முடிவெடுக்கும். கூட்டணியில் கூச்சலோ, குழப்பமோ எதுவும் இல்லை. பாஜகவுக்கும், எனக்கும் எந்த கட்சியின் மீதும், கட்சி தலைவர் மீதும் கோபம் இல்லை.
அதிமுக பலமுறை தமிழகத்தை ஆட்சி செய்துள்ளது. அவர்கள் வளர வேண்டும் என்பது நினைப்பது எந்த வித தவறும் இல்லை. கூட்டணிக்குள் சின்ன சின்ன சிராய்ப்புகள் வருவது சகஜம் தான். பாஜக வேகமாக வளர வேண்டும் என்கிற முன்னெடுப்பு நாங்கள் எடுத்துள்ளோம்.
ட்ரோல் வீடியோ, மீம் வீடியோக்களுக்கு இந்த அரசு வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைக்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் ஜனநாயகத்தை பற்றி பேசுவது தான் நகைப்பான விஷயம். ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு முதல்வருக்கு தகுதி இல்லை. அண்டை மாநிலங்களில் பால் கொள்முதல் விலை 48 ரூபாய் தமிழகத்தில் 33 ரூபாய் உள்ளது. பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு நாங்கள் நம்பிக்கை கொடுத்துள்ளோம். கோட்டையை நோக்கி இதை பெரிய அளவில் எடுப்போம்.
கர்நாடக தேர்தலைப் பொறுத்தவரை பாஜக ஆட்சியில் உள்ளது. காங்கிரசின் பிரச்சாரத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாஜக ஆட்சியில் வரும். இதுவரை 140 சீட்டுகளை வெல்வோம் என்று நம்புகிறேன்.
ஆன்லைன் ரம்மி மசோதாவில் ஏற்கனவே ஆளுநர் உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதுவும் சிக்கல்கள் உள்ளதா என கேள்வி எழுப்பி சில மாற்றங்களை செய்யச் சொல்லி இருந்தார். ஆனால் தமிழக அரசு, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல எந்தவித மாற்றமும் செய்யாமல் மீண்டும் அனுப்புகிறார்கள். அதனால் இம்முறை ஆளுநர் கையெழுத்திட்டே ஆக வேண்டும். ஆளுநர் கையெழுத்திட்ட பிறகு 100 சதவிகிதம் ஸ்டே தரப்படும். அந்த நேரத்தில் அரசு வருத்தப்படும். அன்று சட்ட அமைச்சர் மக்களிடம் என்ன சொல்வார் என்று தான் காத்துக் கொண்டிருக்கிறோம். எந்தவித மாற்றமும் செய்யாமல் இருப்பது திமுக அமைச்சர்களுக்கும், ஆன்லைன் ரம்மி கம்பெனிக்கும் தொடர்புள்ளதா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது என்று கூறினார்.







