தமிழ் நாடு முதலமைச்சரும் நடிகருமான விஜய், இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் தமிழ் நாடு, வெளிநாடுகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அவருக்கு அரசியல் மற்றும் சினிமா துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய்க்கு நடிகை சமந்தா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய் அவர்களே…! உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் சிறப்பானதொரு வருடம் அமைய வாழ்த்துகிறேன். நீங்கள் செய்யும் அனைத்தின் மூலமும் தொடர்ந்து பலருக்கும் உத்வேகம் அளித்து, லட்சக்கணக்கானோரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.




