தெலங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் இன்று தமிழ் நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியின் படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர், திருவள்ளூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக செய்துள்ளது.




