தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் – ஜான் பாண்டியன்…!

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமானது என்.டி.ஏ. கூட்டணியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமானது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தது. தேர்தலில் ராஜபாளையம் சட்ட மன்றத் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட ஜான் பாண்டியனின் மனைவி பிரிசில்லா பாண்டியன் தோல்வியைச் சந்தித்தார்.

இந்த நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமானது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன், “தமிழ் நாட்டில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. இந்தச் சூழ்நிலை மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வு ஆகியவற்றை முன்னிறுத்தி நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம்.

எங்களது அடுத்தக்கட்ட அரசியல் பயணம் மற்றும் கூட்டணி குறித்து கட்சியின் மாநில, மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் பொதுக்குழுவைக் கூட்டி, விவாதித்து முறைப்படி முடிவு செய்வோம்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.