தென்கொரிய நாட்டைச் சார்ந்த ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ரூ.20,000 கோடி முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாடு அரசிற்கும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்திற்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ 20,000 கோடி தமிழ்நாட்டில் முதலீடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தென் கொரியா நாட்டை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ரூ 20,000 கோடி முதலீட்டிலான பணிகள் தொடர்பாக இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிகழ்ச்சியில் இன்று தொழில்துறை அமைச்சராக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜா மற்றும் முன்னாள் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொழிற்சாலையை நவீனமயமாக்கல் மற்றும் நவீன வகை கார்கள் உருவாக்குதல், மின் வாகன மின்கலன்களின் கூட்டப்பட்ட தொகுப்பு, மின் வாகன மின்னேற்று நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ள தேவையான வசதிகளை செய்து தருவது குறித்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.







