வசூல் மழையில் ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ திரைப்படம்…..!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ’துரந்தர்’ திரைப்படம் உலகளவில் ரூ.1240 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘துரந்தர்’. ஆதித்யா தார் இயக்கிய இப்படத்தில் ‘தெய்வ திருமகள்’ படத்தில் விக்ரமின் மகளாக நடித்த சாரா அர்ஜுன் இதில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் மாதவன், சஞ்சய் தத், அக்சய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உட்படப் பலர் நடித்திருக்கின்றனர்.

கடந்த டிச.5-இல் திரையரங்குகளில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் துரந்தர் திரைப்படத்தில் வசூல் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி  ’துரந்தர்’ திரைப்படம் உலகளவில் ரூ.1240 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.968 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.