உதகையில் இடியுடன் பெய்த கனமழையால் சாலை மற்றும் நடைபாதைகளில் மழைநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினார்.
நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக பிற்பகல், மாலை நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்றும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் உதகை மத்திய பேருந்து நிலையம், சாலை, நடைப்பாதைகளில் மழை நீர் சூழ்ந்து காணப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் சூழ்ந்து காணப்படுவதால் கால்வாய்களை நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே போல் கனமழை காரணமாக தலைக்குந்தா பகுதியில் காமராஜர் அணையை சுற்றி அமைந்துள்ள சிறு நீரோடைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் காமராஜர் அணையில் நீர்மட்டம் அளவு அதிகரிக்க துவங்கியுள்ளது.
—அனகா காளமேகன்






