ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா கொமேனி அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து மேற்காசியாவில் போர் வெடித்தது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளால் தற்போது தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கொமேனியின் உடலுக்கு இறுத்சடங்கு செய்யப்பட்டு நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப், கொமேனியின் இறுதிச் சடங்கில் கூடியுள்ள எஞ்சிய ஈரானியத் தலைவர்களை ஒரே குண்டில் தீர்த்துக்கட்டிவிடமுடியும் என்று கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் டிரம்பின் கருத்திற்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. அர்மெனியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மனிதர்களைக் கொல்லலாம், ஆனால் கொள்கைகளைக் கொல்ல முடியாது. நீங்கள் அயதுல்லா கமேனியை கொன்றீர்கள்; ஆனால் உண்மையில், நீங்கள் ஒரு நறுமணப் புட்டியை உடைத்தீர்கள்—அதன் மணம் எல்லா இடங்களிலும் பரவியது. நாகரிகமோ, வரலாறோ, கண்ணியமோ உங்களிடம் இல்லாததால், இந்த விஷயங்களை உங்களால் புரிந்துகொள்ள முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




