அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ் நாடு முழுவது மக்களை சந்தித்து வருகிறார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் நடைபெற்று வரும் இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று பெருந்துறை சட்டமன்ற தொகுதி மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது :
அதிமுக கட்சியை பாஜக அழித்துவிடும் என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார் . கடந்த 2017 அம்மாவின் வரவிற்கு பிறகு உங்களின் பேராதரவரால் கழக நிர்வாகிகள் தொண்டர்களுடன் சட்டமன்ற உறுப்பினர்களோடு நான் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டேன். மேதகு ஆளுநர் ஆணைப்படி சட்டமன்ற தலைவர் அவர்கள் எனக்கு உத்தரவு வழங்கினார்கள்.
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆணையை பிறப்பித்தார்கள். சட்டமன்ற கூட்டப்பட்டது பெரும்பான்மை நிற்கின்ற அந்த நேரத்தில் அவரைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் அவதூறு செய்தார்கள். சட்டப்பேரவை நாற்காலியை கீழே தள்ளி மைக்கை உடைத்தார்கள் சட்டமன்றத்தையே அலங்கோலப்படுத்தினார்கள்.
நேற்றைய தினம் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்ட ஒருவர் திமுகவில் இணைந்துள்ளார். அதிமுக எனக்கு சரியான மரியாதை கொடுக்கவில்லை என்று பேசியிருக்கிறார். பெரும்பான்மையை எதிர்த்து ஓட்டு வாக்களித்தவர். கேடு நினைப்பவன் கெட்டுப் போவன், உப்பு தின்பவன் தண்ணி குடித்தே ஆக வேண்டும் அதேபோல இந்த இயக்கத்திற்கு துரோகம் இழைத்த அவரே வெளியேறியிருக்கிறார். இந்தக் கட்சி அவருக்கு எவ்வளவு அடையாளத்தை கொடுத்தது .
அம்மாவின் மறைவிற்கு பிறகு எவ்வளவு பிரச்சனையை சந்தித்தோம். அவரை நம்பி முதலமைச்சர் பதவியை கொடுத்தோம். சாதாரணமாக இருந்த வரை முதலமைச்சராக அமர வைத்தது அதிமுக.
திமுகவில் எவ்வளவு உழைத்தாலும் உயர்ந்த பதவிக்கு வர முடியாது. கருணாநிதி இருக்கும் போது ஸ்டாலின் துணை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை ஸ்டாலினால் தலைவராக ஆக முடியவில்லை . கருணாநிதியால் முடியாத நேரத்தில் கூட செயல் தலைவராகத்தான் ஸ்டாலினை நியமித்தார் .
திமுகவில் மூத்த நிர்வாகிகள் இருக்கும் நிலையில் அவர்களுக்கெல்லாம் துணை முதல்வர் பதவி வழங்காமல், எந்த தியாகத்தையும் செய்யாத உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல் பதவியை வழங்கியுள்ளனர்.
கஞ்சா விற்காத இடமே தமிழகத்தில் கிடையாது. இதனால் இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. உலக மகளிர் தினமான இந்த நன்னாளில் குமராபாளையத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது . பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி இங்கு நடந்து கொண்டிருக்கிறது.







