நாளை வெளியாகிறது +2 தேர்வு முடிவுகள்; பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…!

+2 தேர்வு முடிவுகள் திட்டமிட்ட படி நாளை வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ் நாடு பள்ளிகல்வித்துறை சார்பில் கடந்த மார்ச் 12 ஆம் தேதி முதல் 26 வரை பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற இத்தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்த தேர்வுக்கான விடைத்தாள்களானது ஏப். 6 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. மேலும் தேர்வு முடிவுகள் (மே.08) நாளை வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக திட்ட மிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியாகுமா என்கிற கேள்வி எழுந்தது.

இந்தநிலையில் ஏற்கனவே அறிவித்தபடி +2 தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறைஅறிவித்துள்ளது. அதன் படி தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.