திமுகவை மிரட்டி 28 இடங்களை வாங்கியுள்ள காங்கிரஸ் – எடப்பாடி பழனிசாமி……..!

தொகுதிபங்கீட்டின் போது காங்கிரஸ் கட்சி திமுகவை மிரட்டி 28 இடங்களை பெற்றுள்ளதாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ் நாடு முழுவது மக்களை சந்தித்து வருகிறார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் நடைபெற்று வரும் இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது :

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஸ்டாலின் கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார் . செந்தில் பாலாஜியை அடையாளம் காட்டியது அதிமுக தான். கட்சிக்கு துரோகம் செய்த அவரை வைத்துக் கொண்டு பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.  செந்தில் பாலாஜி மூலமா தான் உங்களுக்கு ஆப்பு அடிக்கப் போகிறார்கள். இப்படிப்பட்டவர்களை வெளியேற்றியதால் தான் நாங்கள் வலிமையாக இருக்கிறோம்

ஸ்டாலினால் அதிமுக ஆட்சி மீது குறை சொல்ல முடியவில்லை . எல்லா பொதுக்கூட்டத்திலும் அவர் தமிழ்நாட்டுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் போட்டி என்று பேசுகிறார். எங்கள் கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று அமித்ஷா கூறிவிட்டார் .

அதிமுக பாஜகவுக்கு அடிமை என்று ஸ்டாலின் கூறி வருகிறார். காங்கிரஸ் திமுகவை அடிமையாக்கி கூட்டணி வைத்த சம்பவம் யாரும் மறக்கவில்லை.
திமுக என்ற மக்கள் விரோத ஆட்சி அடிப்படையிலிருந்து அகற்ற வேண்டும் என்பது ஒத்த கருத்த கட்சிகள் ஒன்று கூடி கூட்டணி அமைத்துள்ளோம். ஸ்டாலின் தோற்க போகிறார். காங்கிரஸ் திமுக தொகுதி பங்கீடு 28 இடங்களை மிரட்டி வாங்கி உள்ளது.

2021 சட்டமன்ற பொது தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக 525 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றுள் நான்கில் ஒரு பங்கை கூட நிறைவேற்றவில்லை. வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலில் சர்வாதிகார ஆட்சி குடும்ப ஆட்சி வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற தேர்தலாக அமைய

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் பேரில் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 2000 வழங்கப்படும். ஒவ்வொரு தைப் பொங்கல் அன்றும் பொங்கல் தொகையுடன் ஆயிரம் வழங்கப்படும். ஒவ்வொரு தீபாவளிக்கும் அனைத்து மகளிர்க்கும் பட்டுப்புடவை வழங்கப்படும்.

அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் கான்கிரீட் கட்டி தரப்படும். முதியோர் உதவி தொகை மாதந்தோறும் 2000 வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு மூன்று கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடந்த அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.