ஆட்சியமைக்க ஆதரவு கோரிய தவெக; ஐயுஎம்எல்-லின் பதில் என்ன…?

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லீக் லீக் கட்சியிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெகவின் தலைவர் விஜய் தமிழ் நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். 5 எம்.எல்.ஏக்கள் கொண்ட காங்கிரஸின் ஆதரவால் தவெகவின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் ஆட்சியமைக்க தேவையான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்குமாறு ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விசிக, இடதுசாரிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சிகள் பரிசீலித்து வருகின்றன.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லீக் லீக் கட்சியிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது.

ஆனால் ஐ.யு.எம்.எல் கட்சி தலைவர் காதர் மொய்தின் இந்த விவாகரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்னவோ, அதுதான் தங்களுடையது என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.