10 வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று முடிவில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமாதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.
இந்த நிலையில் இப்போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார் . இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
அணி விவரம்
இந்தியா : சஞ்சு சாம்சன் (WC), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (C), திலக் வர்மா, ஹார்டிக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
நியூசிலாந்து : டிம் சீஃபர்ட் (WC), ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திர, க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னர் (C), ஜேம்ஸ் நீஷம், மேட் ஹென்றி, லாக்கி பெர்குசன், ஜேக்கப் டஃபி .







