தனியார் பள்ளிகளின் கட்டமைப்பை மிஞ்சும் அளவிற்கு அரசு பள்ளிகளின் புதிய கட்டிடத்தை விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் திறந்து வைத்தார்.
இந்தியா முழுவதும் கல்வி கற்பதற்காக மாணவர்கள் அரசு பள்ளியைத்தான் பெரும்பாலும் சார்ந்து உள்ளனர். வறுமை, கல்வியறிவின்மை , குழந்தை தொழிலாளர்கள் போன்ற காரணங்களால் பல மாணவர்கள் கல்வி கற்கும் போது இடையில் நின்று விடுகிறார்கள். இதனால் நாட்டின் கல்வியறிவு விகிதம் குறைந்து வந்தது. இதனை அதிகப்படுத்த அரசு சத்துணவு, இலவச புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட பல திட்டங்களை முன்னெடுத்தது. இதற்கு நல்ல முடிவுகளும் கிடைத்தன. கல்வியறிவு விகிதமும் அதிகரித்தது.
இந்தியாவில் உள்ள கல்வி நிலையங்களில் மூன்று பங்கு அரசு பள்ளிகள் தான். அரசு பள்ளிகளின் தரம் மற்றும் கட்டமைப்புகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக சிலர் அதிகளவு பொருளாதாரத்தை கொடுத்து தனியார் பள்ளியை நாடி செல்வதுண்டு. சமீபத்தில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவது மற்றும் அரசு பள்ளிகளில் படிப்பது தொடர்பாக் ஊக்குவித்தல் உள்ளிட்ட திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு பள்ளிகளை தரம் உயர்த்தி மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து முன் மாதிரி பள்ளிகளை விசிக வின் நாகப்பட்டினம் எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் கட்டி முடித்து திறந்து வைத்துள்ளார்.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகப்பட்டினம் எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்ததாவது..
” நாகப்பட்டினம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்படும் ஒவ்வொரு அரசுப் பள்ளியும் தனியார் பள்ளிகளின் கட்டமைப்பை விஞ்சும் வகையில் அமைய வேண்டும் என்ற இலக்குடன், தொடக்கமாக திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்துள்ளோம்.







