பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிரட்டல் விடுத்ததாக அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார்.
வேளாண் விளைபொருள் வர்தகம் மற்றும் வணிகம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாய ஒப்பந்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் உள்ளிட்ட மூன்று புதிய வேளாண் மசோதாக்கள் கடந்த 2020 – 2021 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது.
இந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 2020-2021 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினர். ஓராண்டுக்கு மேல் விவசாயிகளின் இந்த போராட்டத்தையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, விவசாயிகளின் நலனுக்காகவே அந்த 3 சட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் அவர்களே வேண்டாம் என சொல்லும் போது எதற்காக அந்த சட்டம் என கேட்டு அதை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதனபின்னர் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் முடிந்து ஓராண்டுக்கு பிறகு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மிரட்டப்பட்டதாக குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதையடுத்து, சில பிரச்னைகள் காரணமாக 2022 நவ.29 ஆம் தேதி அன்று டிவிட்டரின் சிஇஓ-வாக இருந்த ஜாக் டோர்சி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து புதிய சிஇஓவாக இந்திய வம்சாவளியான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து ட்விட்டரின் முன்னாள் CEO-வாக இருந்த ஜாக் டோர்சி ட்விட்டருக்குப் போட்டியாக ‘Bluesky’ என்ற செயலியை அறிமுகப்படுத்தி அதை மேம்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஜூன் 12-ம் தேதி அன்று, பிரேக்கிங் பாயின்ட்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு ட்விட்டரின் முன்னாள் CEO-வாக இருந்த ஜாக் டோர்சி பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு அரசாங்கங்களிலிருந்து அவர் பெற்ற அழுத்தங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய ஜாக் டோர்சி, “நான் ட்விட்டர் CEO-வாக பொறுப்புவகித்திருந்த சமயத்தில் பல வெளிநாட்டு அரசுகள் நிறைய நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் கொடுத்திருக்கின்றன. உதாரணமாக, இந்தியாவில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடந்திய போது, அதுதொடர்பாக, மத்திய அரசிற்கு எதிராக பதிவுகளை வெளியிடும் பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என்று பல்வேறு வகையில் கோரிக்கைகளும், அழுத்தங்களும் வந்தன.
மேலும் ‘இந்தியாவில் ட்விட்டரை மூடுவோம். உங்கள் ஊழியர்களின் வீடுகளில் சோதனை அதாவது ரைடு நடத்துவோம். நாங்கள் சொல்வதை நீங்கள் செய்யவில்லை என்றால் உங்கள் அலுவலகங்களை மூடுவோம் என்றெல்லாம் நெருக்கடிகளைக் கொடுத்தார்கள். பிறகு வேறு வழியின்றி அவர்கள் சொன்னதை நாங்கள் செய்தோம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று கூறுகிறோம். இதுதான் இந்தியாவா…. இதுதான் ஜனநாயகமா…. என்று சிரித்துக் கொண்டே ஆதங்கத்துடன் கூறியுள்ளார். ஜாக் டோர்சி 16 ஆண்டுகளாக ட்விட்டர் நிறுவனத்தில் சிஇஓ வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/pbhushan1/status/1668351603433168924?s=20
- பி.ஜேம்ஸ் லிசா








