7200mAh பிரம்மாண்ட பேட்டரியுடன் iQOO Z11x 5G அறிமுகம்: ஆரம்ப விலை ரூ.18,999 மட்டுமே!

iQOO நிறுவனம் தனது புதிய ‘Z’ தொடர் மாடலான iQOO Z11x 5G-ஐ அதிரடியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

iQoo நிறுவனமானது  Z தொடரை இந்தியாவில் விரிவுபடுத்தும் நோக்கில் தனது iQoo Z11x 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

iQOO Z11x மார்ச் 16-ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் MediaTek சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 7,200 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது IP68 & IP69 + டஸ்ட் மற்றும் வாட்டர் அசிஸ்டர்ன்ஸ் உடன் இராணுவ தர நீடித்துழைப்பும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

iQOO Z11x ஸ்மார்ட்போன், 6GB + 128GB முதல் 8GB + 256GB வரையிலான பல்வேறு ஸ்டோரேஜ்களில் கிடைக்கிறது. இது Titanic Black மற்றும் Prismatic Green ஆகிய வண்ணங்களில் வருகிறது. இதன் அடிப்படை விலை ரூ. 18,999 ஆகும்.

ஸ்டோரேஜ்      விலை

6GB + 128GB     ரூ. 18,999
8GB + 128GB     ரூ. 20,999
8GB + 256GB     ரூ.  22,999

முக்கிய அம்சங்கள்

  • iQOO Z11x ஆனது AMOLED பேனலுக்குப் பதிலாக LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்தத் திரை 6.76-இன்ச் அளவைக் கொண்டுள்ளது மற்றும் FHD+ (2344 x 1080) தெளிவுத்திறன் , 120Hz வரை புதுப்பிப்பு வீதம் மற்றும் 1,300 nits பிரகாசத்தை வழங்குகிறது.
  • iQOO Z11x ஆனது MediaTek Dimensity 7400 Turbo ஆல் இயக்கப்படுகிறது.
  • கேமராவை பொறுத்தவரை, iQOO Z11x-ஆனது பின்பக்கத்தில் 50MP Sony IMX852 முதன்மை கேமராவும், அதனுடன் 2MP Bokeh லென்ஸும் இடம்பெற்றுள்ளன. மேலும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. Content creators மற்றும் Vloggers ஆகியோர், துல்லியமான வீடியோக்களைப் பதிவு செய்ய, இந்தத் தொலைபேசியின் 4K (30fps) வீடியோ பதிவு செய்யும் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • iQOO Z11x-இன் மிக முக்கியமான சிறப்பம்ங்களில் ஒன்று இது 7,200mAh திறன் கொண்ட பேட்டரியையும், அதனுடன் 44W அதிவேக சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது. ரூ. 20,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் தொலைபேசிகளிலேயே, இதுதான் இதுவரை வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச பேட்டரி திறனாகும். உயர்தர கேம்ஸ் விளையாடுவது, நீண்ட நேரம் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பதிவு செய்வது, போன்ற தீவிரமான பயன்பாடுகளின் போதும், இந்த அதிக திறன் கொண்ட பேட்டரி நீண்ட நேரத்திற்குத் தாக்குப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
  • சமீபத்திய Android 16-ஐ அடிப்படையாகக் கொண்ட Origin OS 6 இயங்குதளத்தில் இயங்கும் iQOO Z11x-க்கு, இரண்டு முக்கிய OS மேம்படுத்தல்களும் (Updates), நான்கு ஆண்டுகளுக்குப் பாதுகாப்புப் பேட்ச் (Security patch) மேம்படுத்தல்களும் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
  • iQOO Z11x-இன் பிற குறிப்பிடத்தக்க அம்சங்களில், நீர் மற்றும் தூசியிலிருந்து முழுமையான பாதுகாப்பை வழங்கும் IP68/69 தரச்சான்று, வீட்டு உபயோகப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்கான IR Blaster வசதி, மற்றும் அழைப்புகள் அல்லது அறிவிப்புகளைச் சுட்டிக்காட்டும் வகையில் தொலைபேசியின் பின்பக்கத்தில் அமைந்துள்ள LED Ring Light ஆகியவை அடங்கும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.