ஜெயலலிதா பற்றி என்ன சொன்னார் அண்ணாமலை?… அதிமுக தலைவர்கள் கொந்தளிக்க காரணம் என்ன?

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில் அண்ணாமலை என்ன கூறினார் என்பதை தற்போது பார்க்கலாம்….  1991 முதல்…

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில் அண்ணாமலை என்ன கூறினார் என்பதை தற்போது பார்க்கலாம்…. 

  • 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் ஊழல் காணப்பட்டதாகவும், முன்னாள் முதலமைச்சர்களை குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
  • அப்போது நடைபெற்ற ஊழலால் தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும், அது தான் ஊழல்களிலேயே முதன்மையானது என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
  • பாஜகவை வலுப்படுத்துவேன் என கூறிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
  • தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக வலிமையான கட்சி என குறிப்பிட்டாலும், அதில் மனநிறைவு அடைய முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
  • இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றிணைவது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் அதில் என்றும் பாஜக தலையிடாது என கூறியிருந்தார்.
  • அதிமுக பொதுச்செயலாளர், இரட்டை இலைச் சின்னம் ஆகிய விவகாரங்களில் பாஜக நடுநிலை வகிப்பதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.