சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் 275 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கத் தயாரா?

செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 275 சிறப்பு அலுவலர் பதவிகள் நிரப்பப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சிறப்பு அலுவலர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 275 சிறப்பு அலுவலர் பதவிகள் நிரப்பப்படுகிறது.

இந்த பணிக்கான விண்ணங்கள் கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. அதே போல விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 23 ஆகும்.

கல்வித்தகுதியை பொறுத்தவரை பொறியியல் துறையில் பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ. முடித்திருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதே போல : 31.1.2026 தேதியின்படி 30, 35, 45 வயதிற்குள் இருக்க வேண்டும். பதவியின் தன்மைக்கேற்ப வயதுவரம்பு மாறுபடுகிறது.

சம்பள விவரம்

 

மேலும் இந்த சிறப்பு அலுவலர் பதவிக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளோர் https://www.centralbankofindia.co.in/en/recruitments என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.