முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதா? பா. ரஞ்சித் கண்டனம்

புதுக்கோட்டை வேங்கை வயல் பட்டியலின மக்களுக்காக எந்த வகையிலும் குரல் கொடுக்காத, அவர்களுக்காக நடவடிக்கை எடுக்காத அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், தமிழக காவல்துறை ஆகியோருக்கு வன்மையான கண்டனங்களை தெரிவிப்பதாக இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், இடையூர், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இனத்து மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், 15 தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் மனித கழிவுகளை கலந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, மாவட்ட காவல்துறை சார்பில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை அந்த கிராமத்தைச் சேர்ந்த 70 பேரிடம் விசாரணை செய்து வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.

இதனையடுத்து , வேங்கைவயல் கிராமத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவை கலந்து கீழ்தரமான செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், பட்டியலின மக்கள் வசிக்கும் வேங்கை வயலில், நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக, இயக்குனர் பா.ரஞ்சித் தனது சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தொடரூம் சமூக அநீதி😡! புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடூம் கண்டனங்கள்!!

வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனித்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்! என்று பதிவிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக – திமுக நேரடியாக எத்தனை இடங்களில் மோதுகின்றன!

EZHILARASAN D

கீழடியில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார் மு.க.ஸ்டாலின்

Halley Karthik

பாக். சிறையில் 83 இந்திய பாதுகாப்பு வீரர்கள்?

G SaravanaKumar