திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாய சங்கத்தினர் மக்காச்சோளம், பருத்தி போன்ற நில பொருள்களை தரையில் கொட்டி போரட்டம் நடத்தினர்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தை சார்ந்த பல்வேறு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர்.இந்த நிலையில் தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாய சங்கத்தினர் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பருத்தி மற்றும் மக்காச்சோளத்தை தரையில் கொட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து செய்தியார்களை சந்தித்து பேசிய விவசாய சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் தெரிவித்ததாவது..மக்காச்சோளம் மற்றும் பருத்திக்கு உரிய லாபகரமான விலை கிடைக்கவில்லை. அரசு அதிகாரிகள் சிண்டிகேட் அமைத்து செயல்படுவதுதான் இதற்கு காரணம். மக்காச்சோளத்திற்கு விலை ரூ 30 கொடுத்தால் தான் எங்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும். ஆனால் இன்றைய விலையில் 25 ரூபாய் 50 காசுகளுக்கு மட்டுமே எடுக்கிறார்கள். அதை போல் பருத்திக்கு கிலோ 100 ரூபாய் கொடுக்க வேண்டும் ஆனால் வெறும் 75 ரூபாய்க்கு மட்டுமே எடுக்கிறார்கள். கடந்த மாதத்தில் 90 ரூபாய் வரை பருத்தி எடுத்திருக்கிறார்கள். மக்காச்சோளம் கடந்த வருடம் குவின்டாலுக்கு 2500 ரூபாய் எடுத்துள்ளார்கள்.
இதனையும் படியுங்கள்: கைதி விழுங்கிய செல்போன் – அறுவை சிகிச்சையின்றி அகற்றிய மருத்துவர்கள்!
இதன் மூலம் மக்காச்சோள விவசாயிகளையும், பருத்தி விவசாயிகளையும் அடி வயிற்றில் அடித்து , அடிமாட்டு விலைக்கு கேட்கிறார்கள். எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை நேரில் அழைத்து சிண்டிகேட் அமைத்து செயல்படும் அதிகாரிகள் மீதும், வியாபாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வியாபாரிகள் இவ்வளவு தான் விலை என நிர்ணயித்தால், அதிகாரிகளும் அதே விலைக்கு எடுக்கிறார்கள் . அதற்கு கூடுதலாக விலை நிர்ணயம் செய்வதில்லை. வியாபாரிகள் பேச்சை கேட்டு அதிகாரிகள் செயல்படுகிறார்கள். எனவே அரசு நிர்ணயித்த படி விவசாயிகளுக்கு 13 முதல் 15 குவிண்டால் வரை மக்காச்சோளம் கிடைக்க வேண்டும் ஆனால் 6 குவிண்டால் மட்டுமே கிடைக்கிறது . இதனால் எங்களுக்கு பருத்தி மற்றும் மக்காச்சோளத்திற்கு பெரிய நஷ்டம் ஏற்படுகிறது.
இதனையும் படியுங்கள்: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; 688 வழக்குகள் பதிவு – சத்யபிரத சாகு தகவல்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனவே உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு மக்காச்சோளத்திற்கு 30 ரூபாய் வழங்க வேண்டும் . அதை போல் பருத்திக்கு 100 ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழக ஆற்று மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.” என விஸ்வநாதன் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பருத்தி, மக்காச்சோளம் போன்ற பொருட்களை எடுத்து கொண்டு போய் விவசாயிகள் முறையிட்டனர். இதனை கேட்டறிந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியதையடுத்து விவாசய சங்கத்தினர் கலைந்து சென்றனர். விவசாய சஙகத்தினரின் திடீர் ஆர்பாட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்பட்டது.
–கோ. சிவசங்கரன்.