கைதி விழுங்கிய செல்போனை அறுவை சிகிச்சையின்றி வயிற்றில் இருந்து பாட்னா மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கைஷார் அலி. வழக்கு ஒன்றில் சிறை தண்டனை பெற்ற அவர் அங்குள்ள சிறையில் கடந்த 3 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அவருக்கு திடீரென கடும் வலிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து சிறை மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, அண்மையில் சிறையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அதிகாரிகளுக்குப் பயந்து தான் பயன்படுத்தி வந்த செல்போனை விழுங்கியதாக அவர் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறை மருத்துவர்கள், உடனடியாக கோபால்கஞ்ச் மாவட்ட மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்லுமாறு சிறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். அங்கு கைதி கைஷார் அலி வயிற்றில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் செல்போன் இருப்பது தெரிய வந்தது.
பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு எண்டோஸ்கோபிக் உதவியுடன் கைதி விழுங்கிய செல்போனை வயிற்றில் இருந்து பாட்னா மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
இதுகுறித்து இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவ கண்காணிப்பாளர் மணீஷ் மண்டல் கூறுகையில், புதன்கிழமையன்று எண்டோஸ்கோபிக் இயந்திரத்தின் உதவியுடன் எந்த அறுவை சிகிச்சையும் இன்றி இந்த அளவிலான பொருள் மீட்டெடுக்கப்பட்டது இதுவே முதல் முறை என்றார்.