நீட் தேர்வை ரத்து செய்ய சூட்சமம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார். இதுவரை ரத்து செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27-ம் தேதி நடக்கிறது. இதற்கான
பிரசாரம் 25-ம் தேதி மாலை 5 மணிக்கு ஓய்கிறது. இதை முன்னிட்டு அனைத்துக் கட்சி
தலைவர்களும் ஈரோட்டில் சூறாவளி பிரசாரத்தை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்ட மன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஜீவானந்தம் வீதியில் தனது தொண்டர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜூ கூறியதாவது: நீட் தேர்வு வந்தற்கு முக்கிய காரணம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ்தான். அன்றைக்கு அமைச்சராக இருந்த காந்தி செல்வன் கையெழுத்திட்டார். அதிமுக ஆட்சியில் அம்மா விலக்கு கேட்டார்கள். அதன் அடிப்படையில் நீட் தேர்வு ரத்து செய்யபட்டது. நீட் தேர்வுக்காக வாதாடியவர் நளினி சிதம்பரம்.
நீட் தேர்வை ரத்து செய்ய சூட்சமம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார் இதுவரை ரத்து செய்யவில்லை. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் எந்த காங்கிரசை தமிழகத்தில் விரட்ட வேண்டும் என நினைத்தார்களோ இன்று அந்த காங்கிரஸை வளர்க்க ஒன்றுபட்டு நிற்கின்றனர்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டமைப்பு வசதிகள்தான் உருவாக்கப்படவில்லை.
அதற்கான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று ராமநாதபுரத்தில் படித்து
வருகின்றனர். உதயநிதி அரசியலில் கத்துக்குட்டி, அவர் பேசுவதை பெரிதாக
எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை. உச்ச நீதி மன்ற தீர்ப்பு கழக தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. குழப்பமான சூழ்நிலைமாறி ஒற்றை தலைமைக்கு கிடைத்த வெற்றி என்றார்.
-ம.பவித்ரா