முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இவிகேஎஸ் இங்கோவனின் வெற்றி எதிர்பார்த்ததுதான்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஈரோடு கிழக்கு தொகுதியில் இவிகேஎஸ் இங்கோவனின் வெற்றி எதிர்பார்த்ததுதான் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மெரீனா விளையாட்டு மைதானத்தில் தளபதி கோப்பை பெண்கள் T20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இன்று தொடங்கி 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்கிறது. இந்த போட்டியினை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து விளையாட்டு மேம்பாட்டு அணியின் இலட்சினையையும் வெளியிட்டார். பின்னர் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பை ஏற்று கொண்டு மைதானத்திற்கு உள்ளே சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிரிக்கெட் விளையாடினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் விழா மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியை திமுக தலைவர் அறிவித்த போது இந்த அணியின் செயலாளராக பதவியை ஏற்றுக்கொள்ள தயாநிதி மாறன் மறுத்தார். ஆனால் அதற்கு பிறகு என்னை விளையாட்டுத்துறை அமைச்சராக அறிவித்த உடனே அந்த பதவியை
ஏற்றுக்கொண்டார். விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பாக நடத்தபப்டும் முதல் நிகழ்ச்சியிலேயே கலைஞருக்கு பிடித்த கிரிக்கெட் போட்டியை நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. திமுகவில் உள்ள அணிகளுக்கு இடையே போட்டி இருக்கும். அதில் எந்த அணி சிறப்பாக நிகழ்ச்சி நடத்துவது என்ற போட்டி இருக்கும். அப்படியான போட்டியில் விளையாட்டு மேம்பாட்டு அணி வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஈரோடு கிழக்கு தொகுதியில் இவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி எதிர்பார்த்ததுதான் என்று கூறிய அமைச்சர் உதயநிதியிடம் , அதிமுக பின்னடைவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்தது பேசிய உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கில் ஒருவருடைய வெற்றியை தான் பார்க்கிறேனே தவிர , மற்றவர்களின் தோல்வியை நான் பார்க்கவில்லை என்று கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கேரளா : இருசக்கர வாகனத்தில் வந்த பள்ளி மாணவர் பேருந்திற்கு அடியில் சிக்கி உயிரிழப்பு

Web Editor

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் சிறைத்துறை டிஐஜி ராஜினாமா!

Jayapriya

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

Web Editor