சென்னை மாநகராட்சி மேயர் தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் சென்னையில் உள்ள சாலைகளை மேம்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் பிப்ரவரி மாதத்திற்கான கூட்டம் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் கூடியது. கூட்டம் தொடங்கியதும் துருக்கியில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், மொத்தம் 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருந்த நிலையில் 73
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெருநகர சென்னை மாநகராட்சியில் 844 நவீன பேருந்து நிழற்குடைகளைப் புனரமைத்து இயக்குதல் மற்றும் மாற்றம் அடிப்படையில் நான்கு ஆண்டுகளுக்கு பொது தனியார் கூட்டாண்மை ( Public Private Partnership) முறையில் புதுப்பித்தல் மற்றும் பராமரிக்கப்படுகிறது.
புவிசார் தொழில்நுட்பம் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட
கட்டிடங்களை ட்ரோன் மூலமாகவும், வீடு வீடாகவும் சென்று சீர் ஆய்வு செய்யப்பட்டதில் அளவீடு உபயோகத்தன்மை மாறுபாடு உள்ள கட்டிடங்களை அளவீடு செய்து வருவாய் பெருக்க குறைந்த விலைப்புள்ளி (5 கோடி) அளித்த நிறுவனங்களுக்கு பணியாணை வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் TURIF 2022-2023 திட்டத்தின்
கீழ் சென்னையில் உள்ள 1,2,3,4,6,10,12,13,14,15 மண்டலத்தில் 370 உட்புற தட
தார் சாலைகளை மேம்படுத்தும் பணிக்கு 17 சிப்பங்களுக்கான 30 தாரர்களுக்கு
பணியினை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் TURIF 21-22 திட்டத்தின் கீழ் மண்டலம் ஒன்று முதல் 15 வரை 300 எண்ணி கீழான உட்புற தார் சாலைகளை மேம்படுத்தும் பணிக்கு 30 சிப்பங்களுக்கான ஒப்பந்ததாரர்களுக்கு பணியினை வழங்கப்படுகிறது.
மேலும், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மண்டலம் 1,2,3,5,11,13 மற்றும்
14 யில் 233 எல்லைக்குள் ஆன உட்புற சாலைகளை மேம்படுத்தும் பணிக்காக 20
சிப்பங்களுக்கு குறைந்த விலை புள்ளி அளித்த ஒப்பந்ததாரருக்கு பணி
வழங்கப்படுகிறது. அத்துடன் மண்டலம் 3,4,6,8,9,10,13 மற்றும் 15 யில் 34
எண்ணிக்கையிலான பேருந்து தடை சாலைகளை மேம்படுத்தும் பணிக்காக 13
சிப்பங்களுக்கு குறைந்த விலை புள்ளி அளித்த ஒப்பந்ததாரர்களுக்கு பணியினை
வழங்கப்படுகிறது.
-ம.பவித்ரா