முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

கொரோனா பரிசோதனை: விஷ மாத்திரைகள் கொடுத்து கொன்ற மர்ம நபர்

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே, கொரோனா பரிசோதனை செய்ய வந்ததாகக் கூறி, மர்ம நபர் கொடுத்த விஷ மாத்திரையை சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கே.ஜி.வலசு பெருமாள் மலை பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன், இரண்டாவது மனைவி மல்லிகா மற்றும் மகள் தீபா, மருமகன் பிரபு ஆகியோருடன் வசித்து வந்தார். முதல் மனைவி சாமியாத்தாளும், மகன் ரவியும் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கருப்பண்ணனின் வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், தாம் கொரோனா பரிசோதனை செய்ய வந்ததாகக் கூறி, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மாத்திரை ஒன்றை கொடுத்துள்ளார். இதனை உண்மை என நம்பிய கருப்பண்ணன், அவரது மனைவி மல்லிகா, மகள் தீபா மற்றும், கருப்பண்ணனின் தோட்டத்தில் வேலை செய்யும் குப்பம்மாள் ஆகிய 4 பேரும், அந்த மாத்திரையை சாப்பிட்டுள்ளனர்.

பின்னர், அந்த மர்ம நபர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இதற்கிடையே, மாத்திரை சாப்பிட்ட 4 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில், மல்லிகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். கவலைக்கிடமான நிலையில், கருப்பண்ணன், மகள் தீபா மற்றும் குப்பம்மாள் ஆகியோர் சிகிச்சை பெற்ற வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பகுதி மக்களிடையே இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Related posts

புதிதாக கட்சி தொடங்கிய அர்ஜூன மூர்த்தி!

Niruban Chakkaaravarthi

வாத்தி கம்மிங் பாடல் ஒரே நாளில் சாதனை!

Niruban Chakkaaravarthi

வெனிசுலா அதிபரின் பக்கத்தை முடக்கிய பேஸ்புக்!

Saravana Kumar