செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் திமுக தேர்தல் வாக்குறுதியின் படி பணி நிரந்தரம் வேண்டி, செவிலியர்கள் ஆறாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று காலை திடீரென 200க்கும் மேற்பட்ட போலீசார், கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குவிந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.
காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டபோது பெண் ஒருவர் மயக்கம் அடைந்ததால் அவரை மருத்துவமனைக்கு கூட அழைத்துச் செல்லாமல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







