பொள்ளாச்சி டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள கோழிகமுத்தி முகாமில் உள்ள யானைகளுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதியிலுள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் தொற்று காரணமாக நீலா பெண் சிங்கம் இறந்ததை அடுத்து வனவிலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து இன்று டாப்சிலிப் பகுதியில் உள்ள கோழிக்குத்தி யானைகள் வளர்ப்பு முகாமிலுள்ள 28 யானைகளுக்கு கால்நடை அலுவலர் டாக்டர் சுகுமார் தலைமையில் மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு ஆய்வு மேற் கொண்டார்.
மருத்துவர்கள் யானையின் தும்பிக்கையில் இருந்து உமிழ்நீர் மற்றும் ஆசனவாயில் இருந்து எச்சம் எடுக்கப்பட்டு, இந்த மாதிரிகள் உத்தரபிரதேசத்தில் உள்ள வன உயிரின மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டு முடிவுகள் வந்த பின்னர் தொற்று இருக்கும் சூழ்நிலையில் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.