முக்கியச் செய்திகள் சினிமா

சூர்யாவுக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை!

நடிகர் சூர்யா தன்னுடைய பையோபிக்கில் நடிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படங்களுக்கு எப்போதும் ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் ’ நடிகையர் திலகம்’ பெறும் வரவேற்பை பெற்றதோடு, காதல் மன்னன் என்று கொண்டாடப்பட்ட நடிகர் உண்மையில் என்னவாக இருந்தார் என்ற ஒரு சித்திரத்தையும் நம் கண்முன்னே காட்டியது. இதுபோல ஒரு கிராமபுறத்தில் இருந்து கிரிக்கெட் அணிக்கு வந்து சேர்ந்து கேப்டன் கூலாக மாறிய தோனியின் வாழ்க்கை வரலாற்று படமும் பெறிதாக பேசப்பட்டது. இப்போது நம்மைவிட்டு வெகு தூரம் சென்றுவிட்ட நடிகர் சுஷாந்த் சிங், தோனியாக வாழ்ந்திருப்பார்.

இதுபோன்ற படங்கள் வாழ்க்கையின் மீதானா நம்பிக்கையை எப்போதும் ஏற்படுத்தும். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் உங்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கினால், அதில் எந்த ஹீரோ நடிக்க வேண்டும் என விரும்புவீர்கள் என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, ‛‛என் பிடித்த ஹீரோ சூர்யா தான். என்னுடைய பயோபிக்கில் நடிக்க அவர் மட்டுமே பொருத்தமாக இருப்பார்” என்று கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

Ezhilarasan

வளர்ச்சி கொள்கை குழுவுக்கு முதலமைச்சரின் முக்கிய அறிவுறுத்தல்.

Ezhilarasan

மேலிட தலையீட்டால் விரக்தி: கோவா ஆம் ஆத்மி தலைவர் ராஜினாமா!

Arun