சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த 15ம் தேதி ஒரு கிராம் ரூ.12,515 க்கும், சவரன் ரூ.1,00,120க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.
அந்த வகையில், தங்கம் விலை நேற்று காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம், பிற்பகல் நிலவரப்படி, மேலும் கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் என மொத்தம் நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 570-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 560-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 770-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,2,160-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 234 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







