தேசிய உழவர் தினம் – அண்ணாமலை வாழ்த்து!

தேசிய உழவர் தினத்தில், மண்ணோடு வாழும் உழைக்கும் கரங்களுக்கு என் மனமார்ந்த வணக்கங்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நம் அனைவருக்கும் உணவளித்து, நம்மை வாழவைக்கும் விவசாயிகளுக்கு, தேசிய உழவர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெயில், மழை, இயற்கைச் சீற்றங்கள் என அனைத்தையும் எதிர்கொண்டும், தேசத்தின் முதுகெலும்பாக, நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்பவர்கள் நம் உழவர்களே. அவர்கள் உழைப்பு மதிக்கப்பட வேண்டும், அவர்களின் வருமானம் உயர வேண்டும், அவர்களின் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதுவே ஒரு வலுவான தேசத்தின் அடையாளம்.

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, PM-Kisan, பயிர் காப்பீடு, நேரடி நிதி உதவி, சந்தை சீர்திருத்தங்கள் போன்ற திட்டங்கள் மூலம் உழவர்களின் வருமானத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

தேசிய உழவர் தினத்தில், மண்ணோடு வாழும் உழைக்கும் கரங்களுக்கு என் மனமார்ந்த வணக்கங்கள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.