இன்று காலை 11 மணிக்கு ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்குத் தொடங்க இருக்கிறது. இது 78-வது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு, டெல்டா பிளஸ் வைரஸ், தடுப்பூசிகள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் பேசவுள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதும் ’மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.







